close
Choose your channels

"மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது"- மயில்சாமி

Wednesday, April 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார். அவரது பேச்சில் அனல பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கூறியது இதுதான்;
இதுமாதிரி செயல்களை ஒரு காட்டுமிராண்டிதான் செய்வான். மனிதனாக இருப்பவன் கண்டிப்பாக இவ்வாறு செய்ய மாட்டான். மதுக் கடையைத் திறக்கக் கூடாது என்றுதானே மக்கள் போராடினார்கள். இதற்கா இந்த தாக்குதல்? மக்களை கேட்டுத்தான் கடையை வைக்க வேண்டும். உங்கள் இஷ்டத்திற்கு மதுக்கடைகளை வைக்க அதிகாரம் கிடையாது மக்களுக்குப் பிடிக்காவிட்டால் அது எதுவாக இருந்தாலும் வைக்கக் கூடாது என்பதுதான் ஒரு அரசின் நிலையாக இருக்க வேண்டும்.
நான் பகிரங்கமாக கூறுகின்றேன், மக்களின் இந்த நிலைப்பாட்டுக்கு நேர்மையான போலீஸ் என்றால் கோபம் வராது பெண்களை தலையில் முடியே இல்லாத போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கிறார். இது எவ்வளவு பெரிய அராஜகம், அந்தப் பெண்ணை தொட்டு தாலி கட்டிய புருஷன் கூட இந்த மாதிரி அடித்திருக்க மாட்டார். அப்பெண்ணைத் தாக்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்கள் கொந்தளித்தால், திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்க முடியாது. கதை வேறு மாதிரி ஆகி விடும் என் தங்கையோ, அம்மாவோ இருந்தால் எப்படி பீல் பண்ணுவேனோ, அந்த உணர்வுதான் எனக்கு உள்ளது. போலீஸ் சம்பந்தப்பட்ட பெண்கள் போராடியிருந்தால் இப்படி அடித்திருப்பார்களா? அவர்களது அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவியாக இருந்திருந்தால் அடித்திருப்பார்களா? போலீஸ் மக்களின் நண்பன். அது மாதிரி நடந்து கொள்ளுங்கள். இவர்களால் நல்ல போலீஸாருக்கும் கெட்ட பெயர் வருகிறது. மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு கெட்ட பெயர் வாங்கிக்காதீங்க. ஏற்கனவே தமிழன்னு வெளியில் சொல்லவே வெட்கக் கேடா இருக்கு. மக்களை நிம்மதியா இருக்க விடுங்க, மக்களை தொந்தரவு பண்ணாதீங்க.
இவ்வாறு நடிகர் மயில்சாமி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.