close
Choose your channels

விஜய் 60' படத்தில் இணைந்த 'கத்தி' நடிகர்

Tuesday, November 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்கு இணையாக விரைவில் தொடங்கவுள்ள 'விஜய் 60' படம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள விஜய்யின் 60வது படத்தில் பரதன், மதி, ப்ரவீண், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க தற்போது வளர்ந்து வரும் நடிகர் சதீஷும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் 'கத்தி' படத்தில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கத்தி' படத்திற்கு பின்னர் மீண்டும் இளையதளபதியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் சந்தோஷத்தை தருவதாகவும், விஜய்யின் 60 வது படத்தில் இணைந்ததற்காக பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.