close
Choose your channels

டிடிவி தினகரனுடன் அதிமுக ஆதரவு நடிகர்கள் திடீர் சந்திப்பு

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் தனது உறவினர் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார். தற்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில்தான் அதிமுக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த டிடிவி தினகரன், நேற்று அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், குண்டுகல்யாணம், மற்றும் புஷ்பவனம் குப்புசாமி அவரது மனைவி அனிதா குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் விரைவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த பொதுக்கூட்டங்களில் ஆற்ற வேண்டிய உரைகள் குறித்து டிடிவி தினகரன் நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதிமுக தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் ராமராஜன், மனோபாலா, அருண் பாண்டியன், பாத்திமா பாபு, லதா ஆகியோர் இணைந்துள்ள நிலையில் அதிமுக சசிகலா அணிக்கு ஆதரவாக விரைவில் நட்சத்திர பேச்சாளர்கள் பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.