close
Choose your channels

ரஜினியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் சந்திப்பு

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த போது விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதை மறைமுகமாக தெரிவித்தார். போர் வரும்போது பார்த்து கொள்வோம் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். திருநாவுக்கரசரின் மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் தரவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படினும் இருவரும் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது
தற்போது 'காலா' படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.