close
Choose your channels

அஜித்துடன் கனெக்ஷன் ஆகிறார் சிவகார்த்திகேயன்

Thursday, April 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'வீரம்', 'வேதாளம்' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, அடுத்து 'அஜித் 57' படத்தையும் இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் சிவா பிசியாக உள்ளார். இந்நிலையில் 'அஜித் 57' படத்தை அடுத்து சிவா இயக்கவுள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'அஜித் 57' படத்தை அடுத்து சிவா, சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் 'தனி ஒருவன்' ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயன் முடித்தவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சிவாவும் சிவாவும் இணையும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.