close
Choose your channels

பெண் எம்.எல்.ஏவிடம் பாராட்டு பெற்ற 'மகளிர் மட்டும்'

Tuesday, September 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளிவந்த ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி பல விஐபிக்கள் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது சிபிஎம் கட்சியின் எம்.எல்.ஏ பாலபாரதி தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

'யார் அந்த பிரம்மா..? மகளிர் மட்டும் மிக அருமை.. மிகவும் அருமை..! பாராட்டுகள்.. வாழ்த்துகள். பெண்கள் மகிழ்ச்சியோடு மகளிர் மட்டும் படத்தை திரையரங்கில் ரசித்தார்கள்… நானும் அவ்வாறே. பல ஆண்டுகள் பேசியும் யாருக்கும் புரியவில்லையே என நினைத்திருந்த பெண்ணிய கருத்தை மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரிந்தீர்கள்.. நல்ல கருத்தோடு நல்ல படம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.” என்று இந்த படம் குறித்து பாலபாரதி எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்

பெண்ணிய கருத்துக்களை ஆணித்தரமாக பொது மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வரும் பாலபாரதி எம்.எல்.ஏ அவர்களின் பாராட்டுக்களை பெற்றது படக்குழுவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.