close
Choose your channels

பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் பிரபல நடிகை

Wednesday, March 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுமான் மகளும், டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், கடந்த சில வருடங்களாக பாஜகவில் இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பாஜக கலைப்பிரிவின் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது காயத்ரி ரகுராமுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராமின் அரசியல் ஆர்வத்தை பாராட்டி அவருக்கு பாஜக.,வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மேலும் காயத்ரி ரகுராம் தற்போது 'யாதுமாகி நின்றாய்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.