close
Choose your channels

'எந்திரன் 2' படத்தின் நாயகி தீபிகா படுகோனே?

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் ஹீரோயின் யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஷங்கர் வட்டாரம் கூறியபோது, இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் ஷங்கர் மிக அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பதால் தீபிகா படுகோனெ யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபிகாவின் மற்ற படங்கள் பாதிக்காதவாறு தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்தால் போதும் என படக்குழுவினர் இறங்கி வந்துள்ளதால் தீபிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்த தீபிகா, மீண்டும் ஒருமுறை ஜோடி சேர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரத்னவேலு ஆகியோர் மீண்டும் இணையவுள்ள இந்த பிரமாண்டமான படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.