close
Choose your channels

விக்ரம்-ஹரியின் 'சாமி 2' இசையமைப்பாளர் அறிவிப்பு

Wednesday, May 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 14 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

'சாமி 2' திரைப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பது மட்டுமின்றி முதல்பாகத்தில் நடித்த த்ரிஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம் 2 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் நடித்த கந்தசாமி' படத்திற்கு பின்னர் மீண்டும் இவர் விக்ரமுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சாமி' படத்தின் முதல் பாகத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.