close
Choose your channels

ஷான் ரோல்டன் ஒரு மிகப்பெரிய பிரபலத்தின் பேரன்: ரகசியம் உடைத்த தனுஷ்

Sunday, July 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து தனுஷ் ஒரு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார்.
மன்னன் மகள், யவண ராணி, கடல் புறா போன்ற பல சரித்திர நாவல்களை எழுதிய பிரபலமான எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய பேரன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் என்னும் ரகசியத்தை தனுஷ் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இதை சொல்வதற்கு கூட அவர் விரும்ப மாட்டார் என்றும், சாண்டில்யன் பேரன் என்பது தெரியக்கூடாது என்பதற்காகவே ராகவேந்திரா என்ற அவருடைய பெயரை ஷான் ரோல்டன் என்று மாற்றியுள்ளதாகவும் தனுஷ் கூறினார்.
மேலும் ஷான்ரோல்டன் ஒரு மிகப்பெரிய தத்துவவாதி என்றும் உலக அரசியலை இந்த சின்ன வயதிலேயே கரைத்து குடித்தவர் என்றும் அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுகொண்டதாகவும் கூறிய தனுஷ், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவர் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளராக வருவார் என்றும் அவருடைய பாடல்கள் பொக்கிஷமாக இருக்கும் என்றும் தனுஷ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.