close
Choose your channels

எனக்கும் ஆசைதான்! ஆனால் நடக்குமான்னு தெரியலை: காலா குறித்து தனுஷ்

Sunday, July 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் 'காலா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில் மிக விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இளவயது ரஜினி கேரக்டரில் தனுஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து நேற்று 'விஐபி 2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனுஷ் கூறியபோது, 'உண்மையில் இளவயது ரஜினி கேரக்டர் ஒன்று 'காலா' படத்தில் இருக்கின்றதா? என்பததே எனக்கு தெரியாது. அப்படி ஒரு கேர்கடர் இருந்து அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எனக்கு மகிழ்ச்சிதான்.
மேலும் 'பவர்பாண்டி' படத்தின் இரண்டாம் பாகம் தன்னுடைய மனதில் இருப்பதாகவும், அந்த படம் என்னுடைய இயக்கத்தின் இரண்டாவது படமா? அல்லது அதற்கு முன்பு இன்னொரு படத்தை இயக்கவுள்ளானா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என்று தனுஷ் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.