close
Choose your channels

தனுஷின் 'வடசென்னை' படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த தகவலை இந்த படப்பிடிப்பில் தனுஷூடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் அமலாபால் நடிக்க வேண்டிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.