close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் எப்போது?

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் அவர்களின் இளையமகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், இந்த படத்தின் டீசர் வரும் மே மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு, பின்னர் இந்த படத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால் மீண்டும் ஜோடி சேரும் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் 'மின்சார கனவு' நாயகி கஜோல் நடிக்கின்றார். மேலும் சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இசையமைத்து வரும் இந்த படத்தில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.