close
Choose your channels

ஓபிஎஸ் உண்ணாவிரத மேடையில் தனுஷ், விஜய் ஆண்டனி பாடல்கள்

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களான மதுசூதனன், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் சென்னையில் மட்டுமின்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதத்தில் அம்மாவின் பெருமையை போற்றும் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா' என்ற பாடல், தனுஷ் நடித்த 'வேலை இல்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற 'அம்மா அம்மா நீ எங்க அம்மா' போன்ற பாடல்கள் ஓபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்படுகின்றது. மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த படங்களின் பாடல்களும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.