close
Choose your channels

தனுஷ்-கவுதம் மேனன் படத்தின் ரிலீஸ் தேதி?

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் ரம்ஜான் திருநாள் விடுமுறையை ஒட்டி அதாவது ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.