close
Choose your channels

சூர்யா பட உரிமையை பெற்ற தனுஷ் பட விநியோகிஸ்தர்

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வந்த 'ஹைக்கூ' படத்தின் டைட்டில் விரைவில் மாற்றப்படவுள்ளது குறித்து சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தின் புதிய டைட்டில் இசை வெளியீடு தினத்தில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வந்த நடிகர் சூர்யா, படத்தின் ரிலீஸ் உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஏற்கனவே 'விண்ணை தாண்டி வருவாயா', வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே' போன்ற பல படங்களை தயாரித்தும் ஒருசில படங்களை விநியோகம் செய்தும் உள்ளார். சமீபத்தில் இவர் ரிலீஸ் செய்த தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'மாரி' ஆகிய படங்கள் இவருக்கு நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யா கல்வியாளராகவும், அமலாபால் ஆசிரியையாகவும் நடித்துள்ளனர். பிந்துமாதவி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திற்கு இசையமைத்த 'அரோல் கரோலி' இசையமைத்தூள்ள இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், பிரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.