close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸில் திடீர் மாற்றமா?

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்சாருக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதும் விண்ணப்பித்த வரிசையின்படிதான் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து சான்றிதழ் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் இந்த படம் சென்சார் ஆகாததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் என்றும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் ஆகவுள்ளதால் 'விஐபி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.