close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2': டீசர் விமர்சனம்

Wednesday, June 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' படத்தில் முதல் பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, ஆகியோர்களுடன் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் இணணந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

'ஒருத்தனுக்கு எதிரிங்க அதிகமா இருந்தாங்கன்னா, அவனைப்பார்த்து அவங்க எல்லாம் பயப்படுறாங்கன்னு அர்த்தம், அப்பத்தான் நீ உன்னோட துறையில உருப்படியா ஏதும் செஞ்சுகிட்ட இருக்கன்னு அர்த்தம், எதிரிங்க இல்லைன்னா வாழ்க்கையே போர், இந்த எதிரிங்க எல்லாம் அவங்களா வருவாங்க, அவங்களா போயிருவாங்க' என்ற வசனத்துடன் வெளிவந்துள்ள இந்தா படத்தின் டீசர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் ஆக்சன் காட்சிகள், சீன் ரோல்டனின் பின்னணி இசை ஆகியவை இந்த படத்திற்கு பெரிய பாசிட்டிவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.