close
Choose your channels

'விஐபி 2' ரன்னிங் டைம் மற்றும் கதைச்சுருக்கம்

Monday, August 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சிங்கப்பூர் சென்சார் P13 என்ற சான்றிதழ் கொடுத்துள்ளது. இதன்மூலம் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த சென்சார் மூலம் இந்த படத்தின் ரன்னிங் டைம் தெரிய வந்துள்ளது. 'விஐபி 2' திரைப்படம் 128 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது.
மேலும் 'வளர்ந்து வரும் ஒரு இளம் கட்டிட வடிவமைப்பாளர் ரகுவரனுக்கும், முன்னணி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வசுந்தராவுக்கும் இடையேயான மோதல்கள் தான் இந்த படத்தின் கதை என்றும், அந்த சென்சார் சான்றிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.