close
Choose your channels

'விஐபி 2' படத்திற்காக தனுஷ்-கஜோலின் புதிய முயற்சி

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், கஜோல் உள்பட பலர் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக புதிய முயற்சி ஒன்று செய்யப்பட்டுள்ளது.

விஐபி 2' படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் ஒரு மியூசிக் வீடியோவை தயாரித்துள்ளனர். தனுஷ், கஜோல் நடித்துள்ள இந்த மியூசிக் வீடியோ ரிலீசுக்கு முன்னர் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மியூசிக் வீடியோவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த தனுஷ் மற்றும் கஜோலுக்கு இயக்குனர் செளந்தர்யா தனது சமூக வலைத்த்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். வித்தியாசமான இந்த மியூசிக் வீடியோ புரமோஷன் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படம் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.