close
Choose your channels

தனுஷ்: இளவயது ராஜ்கிரணை அடுத்து இளவயது ரஜினி?

Saturday, June 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பவர்பாண்டி கேரக்டரில் நடித்த ராஜ்கிரணின் இளவயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தில் ரஜினிகாந்த் 'காலா' என்ற வயதான டான் கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனாலும் இந்த படத்தில் பிளாஷ்பேக் இளவயது கேரக்டரும் கதைப்படி உள்ளதாம். இந்த கேரக்டரில் 'கபாலி' படம் போலவே ரஜினியே நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது கசிந்துள்ள புதிய தகவலின்படி இளவயது 'காலா' கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றாலும் ஒருவேளை இது உண்மையாக இருந்தால் படத்தில் மாஸ் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை ரஜினி படத்தில் தனுஷ் நடித்ததில்லை என்ற நிலையில் இந்த படம் அந்த குறையை போக்குவதோடு, ரஜினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற தனுஷின் வாழ்நாள் ஆசையும் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.