close
Choose your channels

இரண்டாவது வாரத்திலும் பவரான வசூல் செய்த 'பவர்பாண்டி'

Monday, April 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'பவர்பாண்டி' படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வசூலும் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் சென்னையில் இந்த படம் 19 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.53,86,080 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் குடும்பத்துடன் கூடிய பார்வையாளர்கள் 85% நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் கடந்த 14ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை ரூ.1,44,25,810 சென்னையில் மட்டும் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.