close
Choose your channels

தனுஷின் 'பவர்பாண்டி' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

Tuesday, March 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல்வேறு திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நாளை அதாவது மார்ச் 22ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராஜ்கிரணின் சிறு வயது கேரக்டரில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் டிடி என்ற திவ்யதர்ஷினியும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.