close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகிறதா தனுஷின் 'விஐபி 2'?

Friday, July 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது 'வேலையில்லா பட்டதாரி 2', பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் ரயில் படம், மற்றும் வெற்றிமாறனுடன் மூன்றாவது முறையும் 'வடசென்னை' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார்


இந்நிலையில் தனுஷை பாலிவுட்டில் 'ராஜன்னா' படம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல்.ராய், மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு இந்தி படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படம் தற்போது தமிழில் தயாராகி வரும் 'விஐபி 2' படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 'விஐபி 2' தமிழ்ப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சமந்தாவே இந்தி ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அவர் அறிமுகமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை தமிழை போலவே இந்தியிலும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ராஜன்னா, ஷமிதாப் ஆகிய இரண்டு வெற்றி படங்களை பாலிவுட்டில் கொடுத்த தனுஷ், ஹாட்ரிக் வெற்றியை விஐபி 2' மூலம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.