close
Choose your channels

தனுஷ் வெளியிட்ட 'சன்பெண்ட் ஆர்டர்'

Sunday, May 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்குகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்று இணணயதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் வொண்டர்பார் நி'றுவனம் தயாரிக்கும் இன்னொரு படமான 'தரங்கம்' என்ற மலையாள படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது தனுஷின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் தயாரிக்கும் முதல் மலையாள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு புகைப்படங்களுடன் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக கேரள திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

டோமினிக் அருண் இயக்கி வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் டோவினோ தாமஸ் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே பிரபல பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கவுள்ள ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.