close
Choose your channels

விஜய் படத்தை இயக்குவது எப்போது? இயக்குனர் ஹரி

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் இளையதளபதி விஜய் படத்தை விரைவில் இயக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் ஹரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'நான் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க விரும்புகிறேன். அவரை மட்டுமல்ல, அவரைப் போன்ற பல ஹீரோக்களையும் நான் இயக்க விரும்புகிறேன். ஆனால், இதுவரை விஜய்யின் மாஸ்க்கு ஏற்ற தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஒருவேளை அவருக்கு ஏற்ற தயாரிப்பாளர் கிடைத்தால் நான், அவருடன் நிச்சயமாக இணைவேன் என்று கூறியுள்ளார்.

விஜய்யின் மாஸ் மற்றும் ஹரியின் விறுவிறுப்பான ஆக்சன் என இரண்டும் ஒன்றிணைந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கூட்டணி விரைவில் இணையவேண்டும் என்பதே அனைத்து விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.