close
Choose your channels

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில்?

Wednesday, August 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் எம்.ராஜேஷ் படங்களுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும். அவரது முதல்படமான 'சிவா மனசில சக்தி' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'வாசுவும் சிவாவும் ஒண்ணாப் படிச்சவங்க' படம் வரை அனைத்து படங்களிலும் கிட்டத்தட்ட பாதி காட்சிகள் டாஸ்மாக் கடைகளில்தான் இருக்கும். இதில் வாசுவும் சிவாவும் ஒண்ணாப் படிச்சவங்க' படத்தில் ஒரு படி மேலே போய் படத்தின் தலைப்பையே ஒரு பிரபல மது வகையின் (VSOP) பெயரை வைத்தார்.

இந்நிலையில் எம்.ராஜேஷ் தனது அடுத்த படத்திற்கும் இதேபோல் ஒரு டைட்டிலை அவர் தேர்வு செய்துள்ளார். அவரது அடுத்த படத்தின் டைட்டில் 'குடியும் குடித்தனமும்'. இந்த படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே டாஸ்மாக் காட்சிகள் நிச்சயம் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

இந்த படத்தில் 'சிவா மனசுல சக்தி' நாயகன் ஜீவா மீண்டும் ராஜேஷின் நாயகன் ஆகிறார். நடிகை மற்றும் தொழில்நுட்ப தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அவரது வழக்கமான படம் போலவே இந்த படமும் ஜாலியான ஒரு கலகலபான படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.