close
Choose your channels

எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில் KIK?

Monday, November 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவா மனசுல சக்தி' முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்ச்வங்க' வரை பல படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எம்.ராஜேஷ் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. எம்.ராஜேஷின் அடுத்த பட டைட்டில் 'கடவுள் இருக்குறான் குமாரு' என்றும் இந்த டைட்டிலை சுருக்கமாக KIK என்று அழைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கவுள்ள ஹீரோயின் உள்பட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், டிசம்பருக்கும் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.