close
Choose your channels

'விவேகம்' பட டீசர் ரிலீஸ் தேதி. இயக்குனர் சிவா அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, May 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. பல்கேரியாவில் இருந்து படக்குழுவினர் எந்த நேரத்திலும் சென்னை திரும்பலாம் என படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி எப்போது என்ற கேள்வியை லட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் நாள்தோறும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு சற்று முன்னர் பதில் கிடைத்துள்ளது.\

ஆம், இயக்குனர் சிறுத்தை சிவா தனது சமூக வலைத்தளத்தில் 'விவேகம்' படத்தின் டீசர் மே 18ஆம் தேதி வியாழக்கிழமை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே அஜித் ரசிகர்கள் டீசர் குறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மே 18ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், யூடியூபும் அதிரப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.