close
Choose your channels

சுசீந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்த சுசீந்திரன் அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலினால் காதல் செய்வீர்', பாண்டிய நாடு', ஜீவா' உள்பட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாவீரன் கிட்டு' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சற்று முன் அவர் தனது புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'அறம் செய்து பழகு' என்ற சுசீந்திரனின் அடுத்தபட டைட்டிலை பிரபல நடிகர் ஜெயம் ரவி சற்றுமுன் வெளியிட்டார்.

சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் சந்தீப்க்கு ஜோடியாக மெஹரீன் என்பவர் நடிக்கின்றார். இவர் 'கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா' என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெண்ணிலாக் கபடிகுழு` திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி எழுதுகின்றனர். இந்த படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.