close
Choose your channels

மீண்டும் தொடங்கியது பாலாவின் 'தாரை தப்பட்டை'

Monday, July 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஒரு சண்டைக்காட்சியின்போது சசிகுமாருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தாமதமான 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு தற்போது சசிகுமார் குணமாகிவிட்டதால் மீண்டும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இந்த படத்தில் கரக்காட்ட கலைஞர் வேடத்தில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் நேற்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நான் மிகவும் எதிர்பார்த்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. தற்போது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வரலட்சுமி இந்த பாடலுக்காக டான்ஸ் பயிற்சி பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார், வரலட்சுமி, சதீஷ் கெளசிக், பிரகதி குருபிரசாத் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.செழியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். பாலாவின் B ஸ்டுடியோ இந்த படத்தை தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.