close
Choose your channels

திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் பிறந்த நாள். கருணாநிதி, அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.

Wednesday, March 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர்களிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

இதனையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களை பெறுவதோடு அவர்களிடம் உரையாடுகிறார்.

இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவின்போது, தனக்கு புத்தகங்களை மட்டும் பரிசாகக் கொடுங்கள் என கடந்த சில நாள்களுக்கு முன் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை அடுத்து ஸ்டாலினுக்கு பரிசு கொடுக்க பல்வேறு புத்தகங்களுடன் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.