close
Choose your channels

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொருத்தமானவர்? டோரா இயக்குனர்

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் போட்டதற்காக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக நயன்தாரா செய்திகள் குறித்து ஊடகங்களில் வெளிவரும்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் வெளிவருகின்றது. ஆனால் இதற்கு எந்தவித எதிர்ப்பும் எழவில்லை.

இதுகுறித்து நயன்தாரா. நடித்துள்ள 'டோரா' படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி கூறியபோது, 'இந்த படத்தில் நயன்தாராவுடன் பணிபுரிந்தபோதுதான் எனக்கு நயன்தாராவை ஏன் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன். இந்த படத்தில் அவருடைய கேரக்டரின் தோற்றம் முழுக்க முழுக்க அவருடைய ஐடியாதான். காஸ்ட்யூமில் இருந்து கண்ணாடி அணிவது வரை அவர் கொடுத்த ஐடியாதான் உருவானது. அவருடைய இந்த அர்ப்பணிப்பு உழைப்பு காரணமாக அவர் லேடி சூப்பர் ஸ்டார் படத்திற்கு பொருத்தமானவர் என்பதை முடிவு செய்தேன்., மேலும் நயன்தாரா அவருடைய காட்சிகள் முடிந்தவுடன் மற்ற ஹீரோயின்கள் போல் கேரவனில் போய் ஓய்வு எடுப்பவர் அல்ல. படத்தில் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும்போதும் அந்த காட்சிகளை அவர் உற்று கவனிப்பார்.

'டோரா' படத்தில் பவளக்கொடி என்ற கேரக்டரில் நடித்துள்ள நயன்தாரா, முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நயன்தாராவுக்கு தந்தையாக நடித்து வரும் தம்பி ராமையா தற்போது அவருக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.இந்த படத்தில் தந்தை-மகள் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக வந்துள்ளது. தம்பி ராமையா நடிகராகவும், தனிப்பட்ட மனிதராகவும் இனிமையானவர் என்று நயன்தாரா பார்ப்பவர்கள் அனைவரிடமும் கூறி வருகின்றார்' என்று இயக்குனர் தாஸ் ராமசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'டோரா' திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.