close
Choose your channels

குழந்தைகளுக்காக தளபதி விஜய் ஏற்று நடித்த ரோல்: மெர்சலான ரூபன்

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் ரோல்கள் குறித்து எடிட்டர் ரூபன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்துள்ளதை ரூபன் குறிப்பிடவில்லை என்றாலும் மல்டிபிள் ரோலில் விஜய் நடித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் விஜய் நடித்துள்ள மேஜிக்மேன் ரோல், அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இந்த ரோல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரூபன் தெரிவித்தார். குழந்தைகளுக்காக விஜய் ஏற்று நடித்துள்ள இந்த மேஜிக்மேன் ரோல் துறுதுறுவென எனர்ஜியாக இருப்பதால் இந்த ரோல் எனக்கு பெர்சனலாக மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த படத்தில் விஜய் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது சமீபத்தில் வெளியான போஸ்டர்களுக்கு கிடைத்த வரவேற்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.