close
Choose your channels

நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகின்றார்களா? மஞ்சிமா மோகன்

Wednesday, May 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கவே தியேட்டருக்கு வருகிறார்களா? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் "ரசிகர்கள் நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் அந்த கருத்து முற்றிலும் தவறு. ரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே தியேட்டருக்கு வருகிறார்கள். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இந்த கருத்தை மஞ்சிமா மோகன் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டது ஆகும். சமீபத்தில் கூட இயக்குனர் சுராஜ், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது நடிகைகளின் கவர்ச்சியான அழகை ரசிக்கவே என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்து பின்னர் அதற்கு வருத்தமும் தெரிவித்த நிலையில் மஞ்சிமா மோகனின் இந்த பதில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.