close
Choose your channels

உலக நாயகன் கமல் வீட்டில் தீ விபத்து. முக்கிய பொக்கிஷங்கள் சேதம்

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டார். இது அவருக்கு ஒரு சோதனையாக கருதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோதனையாக நேற்றிரவு அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த குளிர்சாதன பெட்டி அதிக வெப்பம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட அதிகப்படியான புகைமூட்டத்தில் சிக்கியிருந்த கமல்ஹாசனை அவரது ஊழியர்கள் காப்பாற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தீ விபத்தில் கமல்ஹாசன் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள் சாம்பலாகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: "என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உறங்க செல்கிறேன். உதவிய பணியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கும் நன்றி. "என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.