close
Choose your channels

முதன்முதலாக பிகினி உடையில் பிரபல நடிகை

Thursday, September 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்த வைத்த நடிகை டாப்சி, அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் 'ஆரம்பம்', 'காஞ்சனா 2', 'வை ராஜா வை', உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அவர் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் டாப்சி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 'ஜூட்வா 2'. வருண்தவான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், அனுபம்கெர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக டாப்சி முதன்முதலில் பிகினி உடையணிந்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது

பாலிவுட் படங்களில் ஏற்கனவே அதிக கவர்ச்சியான வேடங்களில் டாப்சி நடித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பிகினி உடையிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.