close
Choose your channels

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு மீண்டும் ஒரு ரஜினி டைட்டில்

Thursday, March 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்து அப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள இன்னொரு படத்திற்கும் ரஜினி பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் 'குப்பத்து ராஜா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் கடந்த 1979ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.