close
Choose your channels

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. கவுதம் கார்த்திக்

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீமான், சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் நேற்று திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. நான் அவரை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக தான் பார்க்கிறேன். சூப்பர் ஸ்டாராகவே தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்' என்று கூறினார்.

மேலும் எனது குடும்பம் அரசியல் குடும்பமாக இருந்தாலும் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது என்று கூறினார். மேலும் தந்தை நடித்த 'அக்னி நட்சத்திரம்' ரீமேக்` படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிப்பதில் 'தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.