close
Choose your channels

கலகல கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் காமெடி சாம்ராஜ்யம் செய்த நடிகர்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் பெயருக்கு தகுந்தால்போல் 'கவுண்ட்டர்' கொடுப்பதில் வல்லவரான இவர் இன்று தனது 78வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹாலிவுட்டில் சார்லி-சாப்ளின், லாரல்-ஹார்டிக்கு இணையான ஜோடியாக கவுண்டமணி-செந்தில் ஆகியோர்களை கூறலாம். இருவரும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. பல திரைப்படங்கள் இந்த ஜோடியின் நகைச்சுவைக்காகவே ஓடிய வரலாறும் உண்டு.

கோவையை சேர்ந்த கவுடன்மணி நாடக நடிகராக இருந்து திரைக்கு வந்தவர். 1964ஆம் ஆண்டில் இருந்தே சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்தாலும், பாரதிராஜாவின் '16 வயதினிலேயே'; படம் தான் இவரை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி கொடி கட்டியது. சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், என மூன்று தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கவுண்டமணி ஹீரோவாக நடித்த '49ஓ' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று இன்றும் அவர் மார்க்கெட்டில் உள்ளார் என்பதை நிரூபித்தது. இன்று 78வது வயதில் காலடி எடுத்து வைக்கும் கவுண்டமணியிடம் இன்னும் பழைய கம்பீரம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் தான் ஏற்படுகிறது. அவர் இன்னும் பல திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பேரும் புகழும் பெற இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.