close
Choose your channels

'புரூஸ் லீ' பிறந்த தினத்தில் 'புரூஸ் லீ' சிங்கிள் டிராக்

Sunday, November 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'டார்லிங்', 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக குழந்தைகளுக்காக தரவுள்ள முழுநீள ஆக்சன் படம் 'புரூஸ் லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பு, நடிப்பு என இரண்டு குதிரைகளில் திறமையாக சவாரி செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் வரும் 27ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தினம் பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ அவர்களின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 'புரூஸ் லீ' பெயரில் உருவாகி வரும் ஒரு திரைப்படம் 'புரூஸ்லீ பிறந்த தினத்திலேயே வெளியாகவுள்ளது என்பது ஒரு சிறப்பாக கருதப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக க்ரித்தி கார்பானந்தா நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வரும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.