close
Choose your channels

விஜய்யின் 'மெர்சலில்' இணைந்த இன்னொரு விஐபி

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முடிக்கும் நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''மெர்சல்' படத்தில் ஒரு எனர்ஜெடிக்கான பாடலை பாடியுள்ளேன். என்னுடைய ஃபேவரைட் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் விஜய் அண்ணா அவர்களின் படத்தில் பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'ஜெண்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற 'அழகான ராட்ஷசியே' என்ற பாடலையுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 18 வருடங்கள் கழித்து மீண்டும் ரஹ்மான் இசையில் 'மெர்சல்' படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.