close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி படத்தில் ஜி.வி.பிரகாஷ்-சஞ்சிதா ஷெட்டி

Sunday, July 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரஹைன்னா, ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது முதல்முறையாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஏ.ஆர்.ரஹைன்னா, தனது நண்பர்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் பிரபல ஆர்ஜே அசார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் 'சூது கவ்வும்' நாயகி சஞ்சிதா ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்/

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இதுவொரு குறுகிய கால தயாரிப்பு என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹைன்னா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இசையமைக்கவுள்ள உள்ள ஏ.ஆர்.ரஹைன்னா, தனது மகனும் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.