close
Choose your channels

ரஜினி படம் என்றால் குணசித்திர வேடத்திற்கு தயார். ஹன்சிகா

Saturday, October 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் நுழையும் அனைத்து நடிகைகளுக்கும் ரஜினி, கமல், அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இந்த ஆசை இன்னும் பல முன்னணி நடிகைகளுக்கே முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் இந்த ஆசை நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற சீனியர் நடிகைகளுக்கே இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

ரஜினியுடன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் என மூன்று படங்களிலும், அஜீத், விஜய்யுடன் பல படங்களிலும் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு கமலுடன் நடிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய இரு படங்களிலும், அஜீத், விஜய் ஆகியோர்களுடன் பல படங்களிலும் நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு இன்னும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் வேலாயுதம், புலி என விஜய்யுடன் மட்டும் இரண்டு படங்களில் நடித்துள்ள மற்றொரு பிரபல நடிகையான ஹன்சிகா, ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ஹன்சிகாவின் ஆசையை ரஜினி எப்போது நிறைவேற்றுவார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.