close
Choose your channels

மோகன்லால்-விஷால் படத்தில் இணையும் பிரபல நடிகை

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ள படம் ஒன்றை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்த படத்தில் கோலிவுட்டின் புரட்சி தளபதி விஷால் முதல்முறையாக மலையாளம் பேசி நடிக்கவுள்ளார். அவர் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.