close
Choose your channels

அரண்மனை நாயகி ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sunday, August 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்களில் கமல், விஜய், மகேஷ்பாபு உள்பட பலர் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றதை போல நடிகைகளில் ஸ்ரீதேவி, ஷாலினி மற்றும் பலர் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயின் வரை புகழ் பெற்று வந்துள்ளனர். அந்த வரிசையில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகாகி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா, இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமந்தா, த்ரிஷா, விக்ரம் பிரபு, சிம்பு, லட்சுமி மஞ்சு, சிவகார்த்திகேயன், குஷ்பு, உள்பட சக நடிகர்கள், நடிகைகள் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமாகிய ஹன்சிகா அதன் பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். ஹன்சிகா நடித்த 'புலி மற்றும் 'வாலு' ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் தற்போது உயிரே உயிரே, அரண்மனை 2, மற்றும் இதயம் முரளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹன்சிகா நடிகையாக மட்டுமின்றி சமூக சேவைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். அவர் தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான கல்வி, உணவு, உடை உள்பட அனைத்து தேவைகளையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். ஹன்சிகா நடிப்பு தொழிலும், சமூக சேவையிலும் மேலும் சிறந்த விளங்க இந்த பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.