close
Choose your channels

காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மிகச்சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விஜய்யின் 'தளபதி 61' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் தமிழில் அறிமுகமானாலும் அவர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'மகதீரா' என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையானார். இந்த படம் 'மாவீரன்' என்ற தலைப்பில் தமிழிலும் சூப்பர் ஹிட் ஆகியது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் காஜல் அகர்வால் அவ்வப்போது நடித்து வந்த தமிழ்ப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் கார்த்தியுடன் அவர் நடித்த 'நான் மகான் அல்ல', சூர்யாவுடன் நடித்த 'மாற்றான்', ஆகிய படங்கள் அவரது நடிப்பிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அதன்பின்னர் காஜல் அகர்வாலை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் இளையதளபதி விஜய்யுடன் அவர் நடித்த 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்களை கூறலாம்.

இதன்பின்னர் தனுஷுடன் நடித்த 'மாரி', விஷாலுடன் நடித்த 'பாயும் புலி' ஆகிய படங்களும் சுமாரான வெற்றியை தந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள 'விவேகம்' மற்றும் 'தளபதி 61' படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த வருடத்தில் அவரது மார்க்கெட் கிராப் வெகுவேகமாக உயரும் என்று கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் இதேபோல் இன்னும் பல வெற்றிப்படங்களில் நடித்து தென்னிந்தியாவின் மாஸ் நடிகை என்ற பெயரை எடுக்க இந்த இனிய பிறந்த நாளில் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.