close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீர்த்திசுரேஷ்

Tuesday, October 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கீழ்வானம் சிவக்கும்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' உள்பட பல தமிழ்,மலையாள திரைப்படங்களில் நடித்து கடந்த 80களில் பிரபலமாக இருந்த நடிகை மேனகாவின் கலையுலக வாரிசுதான் இன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்திசுரேஷ். இன்று பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷூக்கு IndiaGlitz தனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

தயாரிப்பாளர் சுரேஷ்குமார்-நடிகை மேனகாவின் மகளான கீர்த்திசுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் 'கீதாஞ்சலி' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெற்ற வெற்றியினால் தமிழில் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' மற்றும் இயக்குனர் விஜய்யின் 'இது என்ன மாயம்' ஆகிய இரண்டு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரஜினிமுருகன்' முதலில் தயாராகிவிட்டாலும் 'இது என்ன மாயம்' படம் தான் முதலில் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இதனையடுத்து வந்த 'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது

'ரஜினிமுருகன்' பெற்ற வெற்றியால் கீர்த்திசுரேஷுக்கு தளபதி விஜய்யின் 'பைரவா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் சிலருக்கே இன்னும் தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் இரண்டே படம் நடித்த கீர்த்திசுரேஷூக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது கோலிவுட்டில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'ரெமோ' படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்', சீயான் விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2', ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் கீர்த்திசுரேஷ் சாவித்ரி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் வெளியானால் கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் முன்னணி இடத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விருதுகளை குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் கீர்த்திசுரேஷூக்கு மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.