close
Choose your channels

இயக்குனர் செல்வரகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Sunday, March 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கோணத்தில் கதை கூறினால் மட்டுமே பீல்டில் நிலைக்க முடியும் என்ற நிலையில் தனக்கென ஒரு பாணியுடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் வாரீசாக இருந்தாலும் அவருடைய பாணி கொஞ்சம் கூட இல்லாமல் வித்தியாசமான பாணியில் கதை சொல்வதால்தான் அவர் இன்னும் மிகச்சிறந்த இயக்குனர் பட்டியலில் உள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்ட இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கி 'காதல் கொண்டேன்', '7G ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கமென்ன' என தரமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் குடிகொண்டவர்

சகோதரர் தனுஷை சரியான வடிவத்தில் செல்வராகவன் செதுக்கியதால்தான் இன்று அவர் பல்திறமை கொண்ட ஒரு கலைஞராக கோலிவுட்டில் வெற்றி பெற்று வருகிறார். செல்வராகவனின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியை தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய இந்த பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம். இதேபோல் அவர் இன்னும் பல வெற்றி படங்களை இயக்கி உலக அளவில் ஒரு சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.