close
Choose your channels

வித்யா பாலன் இடத்தை பிடித்தாரா லட்சுமி மேனன்?

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'Yatchan' Movie Audio LaunchClick here for Lakshmi Menon Gallery

'விஐபி 2' படத்தை அடுத்து தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எதிர்நீச்சல், காக்கிசட்டை பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷ் முதல்முறையாக அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வித்யா பாலனிடம் கால்ஷீட் தேதிகள் ஒத்துபோகாததால், தற்போது அவருக்கு பதில் லட்சுமி மேனனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தனுஷுடன் நடிக்க லட்சுமி மேனன் ஆர்வமாக இருப்பதாகவும், அஜீத்துடன் அவர் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை அவரால் கொடுக்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.